இவனுக்கு அப்போது மனு என்று பேர்
Ivanuku Apothu Manu Endru Per
பள்ளி ஆசிரியரான இரா. எட்வின் சமூகத்தில் நடந்த, நடக்கும் சம்பவங்களை தன் சொந்த வாழ்வில் அவர் பார்த்த மனிதர்களையும் அவர்கள் மூலம் ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பாக அவருடைய ஆசிரியர் மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாக உள்ளது. நாத்திகனாய் இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தன் முகநூல் பக்கத்தில் குவிந்த வாழ்த்துக்கள் பொங்கல் பண்டிகையன்று வெறிசோடிக் காணப்பட்டதைக் குறிப்பிடும் போது அதற்க்கு என் பெயரே காரணம் என்கின்றார்.
பாரதி பாரதிதாசன் முதல் சந்திப்பு, எந்த மனிதரையும் அவரை அவராகவே பார்க்கவும், ஒப்பிடுதல் கூடாது போன்றவைக்கு நல்ல விளக்கத்தை தந்துள்ளார். 104 பக்கங்களை கொண்டுள்ள சிறிய புத்தகம் எனினும் ஒரு நல்ல அறிவு பெட்டகம்.
புருஷோத்தமன் ராமச்சந்திரன்
Purushothaman Ramachandran