Tuesday 13 November 2018

My Reading List | இவனுக்கு அப்போது மனு என்று பேர் | Ivanuku Apothu Manu Endru Per

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

Ivanuku Apothu Manu Endru Per






பள்ளி ஆசிரியரான இரா. எட்வின் சமூகத்தில் நடந்த, நடக்கும் சம்பவங்களை தன் சொந்த வாழ்வில் அவர் பார்த்த மனிதர்களையும் அவர்கள் மூலம் ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பாக அவருடைய ஆசிரியர் மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாக உள்ளது. நாத்திகனாய் இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தன் முகநூல் பக்கத்தில் குவிந்த வாழ்த்துக்கள் பொங்கல் பண்டிகையன்று வெறிசோடிக் காணப்பட்டதைக் குறிப்பிடும் போது அதற்க்கு என் பெயரே காரணம் என்கின்றார். 

பாரதி பாரதிதாசன் முதல் சந்திப்பு, எந்த மனிதரையும் அவரை அவராகவே பார்க்கவும், ஒப்பிடுதல் கூடாது போன்றவைக்கு நல்ல விளக்கத்தை தந்துள்ளார். 104 பக்கங்களை கொண்டுள்ள சிறிய புத்தகம் எனினும் ஒரு நல்ல அறிவு பெட்டகம்.


புருஷோத்தமன் ராமச்சந்திரன்  
Purushothaman Ramachandran

Friday 19 October 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devadhaigal

ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devadhaigal





பிரபல எழுத்தளார் சுஜாதா அவர்கள் தன்னுடைய ஸ்ரீரங்க வாழ்கை நினைவுகளை(memoir) இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சந்தித்த மனிதர்களையும் அவர்களுடன் கற்றுக்கொண்டதையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதில் விவரித்து இருக்கிறார்.
ஒவ்வொரு நினைவுகளை படிக்கும் போதும் நமக்கு ஒரு சிறுகதை படிக்கும் எண்ணம் தோன்றுகிறது. இதற்கு காரணம் எழுத்தாளரின் எடுத்துரைத்தல்(narration) விதமும் அவர் குறிப்பிட்டுயுள்ளதைப் போல கற்பனையைச் சரியான விகிதாசாரத்தில் கதையுடன் சேர்த்ததுமே ஆகும். 
புத்தகத்தை வாசித்தப் பின்பு நம் பேச்சு, பிராமணச் சமூகத்தினரின் பேச்சு வழக்குப்போல் மாறினாலும் வியப்பில்லை. நிறைய தங்கிலிஷ்(Tanglish) வார்த்தைகள் உண்டு. சுஜாதா ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதற்கு இந்த புத்தகம் மற்றொருச் சான்று.


புருஷோத்தமன் ராமச்சந்திரன்  
Purushothaman Ramachandran






Sunday 7 October 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - Animal Farm


     Animal Farm                    

-George Orwell








Animal Farm is a fantastic allegorical novella written by George Orwell. Even though he represents animals in this fable it is all about the humans, comparing the animal farm with Russian revolution.  
All revolution starts with "everyone are equal" but ends with "everyone are equal but some are more equal than others". 
Moral of this novella is whether it is right wing or left wing, ruling class is always a ruling class-it exploits common people. A political satire where author strips the left propaganda. A great read even the left ideologists will enjoy.




Monday 11 June 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - Ki.Mu Ki.Pi | கி.மு கி.பி

கி.மு கி.பி | Ki.Mu Ki.Pi           
 -மதன் (Madhan)





பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் குமுதத்தில் கி.மு கி.பி என்ற தலைப்பில் எழுதிய வரலாற்று தொடரின் தொகுப்பே இந்த புத்தகம். கி.மு கி.பி என்ற தலைப்பில் இருந்தாலும் கி.மு காலகட்டத்தை மட்டுமே விவரிக்கிறது இந்த புத்தகம். 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி வெறும் 7927 மைல் விட்டமுள்ள ஒரு மிதக்கும் பாறை என்ற தகவலில் தொடங்கி கிறிஸ்து பிறப்பு வரை பல ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த புத்தகத்தில் காணலாம்.
முதல் ஆதிமனிதன் ஒரு பெண். அவள் ஆப்ரிக்க கருப்பு பெண் என்ற விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட தகவல் நமக்கு ஆச்சரியமூட்டுகிறது. மேலும், முதல் ஊரின் பெயரே "ஊர்" என்பது மற்றொரு ஆச்சரியம். நாடோடி மனிதர்கள் நதிக்கரையோரம் வசித்த மக்கள் மீது தொடுத்த தாக்குதலே முதல் யுத்தம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
யூப்ரேடீஸ் நதிக்கரையில் மலர்ந்த மெசோபேடாமிய நாகரிகத்தை சார்ந்த  பாபிலோனியர்கள் சிற்ப கலையில் சிறந்து விளங்கியது போல முதன் முதலில் உலகில் தெளிவான சட்டங்கள் பிறந்ததும் அங்குத்தான் .
2000 கடவுள்களுக்கு மேல் இருந்த எகிப்து சாம்ராஜயத்தில் ஒரே கடவுள் என்று முதலில் முழங்கிய மன்னன் அக்நேடா, சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடலை பதப்படுத்தும்(மம்மி) முறையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் எகிப்தியர்கள் என்ற தகவல்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன.
இலக்கியம், நாடகம் போன்ற கலைகளில் சிறந்து உலகுக்கு முன்னோடியாய் திகழ்ந்த கிரேக்க நாகரிகம் போரிலும் சிறந்து விளங்கியது. தன்னைவிட நான்கு மடங்கு பெரிய படையான பாரசீக படையை எதிர்த்த போதும் தன் போர் நுணுக்கத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் வென்றது.
அவர்களின் போர் வரலாற்றை படிக்கும் போது "300" என்கிற ஆங்கில படத்தைப் பார்க்கும் போது  ஏற்பட்ட சிலிர்ப்பும்  வியப்பும் மறுமுறை நமக்கு  ஏற்படுகிறது . நவின மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ், தத்துவ மேதைககளான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களை தந்தது கிரேக்க சாம்ராஜ்ஜியம்.
இன்றைய கேரள தமிழக பகுதிகளை தவிர்த்து  அகந்த பாரதத்தின் மன்னனாய் திகழ்ந்த சந்திரா குப்த மௌரியர் வரலாற்றையும் ஆசிரியர் விறுவிறுப்போடு சொல்லியிருக்கிறார்.
உலகில் தோன்றிய நாகரிகங்களில் சிந்து நாகரிகம் போன்று எளிமையான, ஒழுக்கம் நிறைந்த  நாகரிகம் எதுவும் இல்லை என்று கூறலாம்.  நீச்சல் குளம், கழிவறை என அன்றே நாகரிகத்திற்கு எல்லாம் நாகரிகமாக திகழ்ந்துள்ளது. பல படையெடுப்புகள் நடந்தபோதும், பல கலாசாரங்கள் இடையில் நுழைந்தபோதும், திணித்தபோதும்  அவற்றுடன் இரண்டறக் கலந்து ஒரு தொடர் கலாசாரமாக இந்தியா விளங்குவதற்கு சிந்து நாகரிகத்தின் வலிமையும் தொன்மையுமே காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏற்புடையதே.!
வரலாற்றை படிக்கவும் கேட்கவும் அலுப்பு என்று எண்ணுபவர்களுக்குக் கூட மிக எளிமையாக, உரையாடலை போல் இந்த புத்தகத்தை கொடுத்துள்ளார் ஆசிரியர்.


புருஷோத்தமன் ராமச்சந்திரன்  
Purushothaman Ramachandran

Tuesday 29 May 2018

APJ Abdul Kalam Books

APJ ABDUL KALAM BOOKS



  • Wings of Fire
  • Indomitable Spirit
  • Children Ask Kalam
  • Development in Fluid Mechanics and Space Technology
  • Envisioning an Empowered Nation
  • Guiding Souls
  • India 2020
  • Ignited Minds
  • Inspiring Thoughts by APJ Abdul Kalam
  • My Journey
  • Target 3 Billion
  • The Life Tree
  • The Luminous Sparks
  • Mission India
  • Turning Points
  • You are Born to Blossom
  • You are unique
  • Songs of life
  • Spirit of India
  • The Righteous Life: the very best of APJ Abdul kalam
  • Forge your Future
  • A manifesto for change (A sequel to India 2020)
  • Reignite
  • The Guiding Light
  • Beyond 2020: A vision for Tomorrow's India
  • Goverance for Growth in India
  • Transcendence: My Spiritual Experience with Pramukh Swamiji
  • Squaring the circle
  • The Family and the Nation
  • Thoughts for change: We can do it
  • Pathway to Greatness
  • My India: Ideas for the Future
  • Advantage India


My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - Spirit of India

Spirit of India
                            -APJ Abdul Kalam







Spirit of India is a book with selection of questions put to Dr. APJ Abdul Kalam during and after his tenure as the President of India. He has answered for the most interesting, intellectual to naive and irreverent questions in a simplistic way. 
A man with positive thoughts, who inculcated the same to the entire nation, addresses all the concerns, aspirations and dreams of today's young India. From education, science, nation building, corruption, economic imbalance, communal hatred, divisive politics, national security, system failure to his personal interest he answers all our questions. Not a single answer passes a discouragement or negative thoughts to the questioner. 
His critics often question about his concern for environment and say a missile scientist is a destroyer for the environment and nations peace, he has answered to all those questions. 
Righteousness, Dream, Hard-work, Persevere, Sweat, Creativity, Inquisitive, Acquiring Knowledge are the words you can find in his answers consistently.
The last edition of this book is eight years ago (2010), but still most of the questions are apt even today. A must have book for every Indian Youth.



Monday 21 May 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - Dhroga Suvadugal | துரோகச் சுவடுகள்

                             துரோகச் சுவடுகள் | Dhroga Suvadugal                                                -வெ. இறையன்பு (V. Iraianbu) 

நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன் பேச்சாலும் எழுத்துக்களாலும் புகுத்தி நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் அய்யா வெ.இறையன்பு அவர்கள் துரோகச் சுவடுகள் என்ற எதிர்மறை தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.  

மனிதர்களின் சுயநலம், பேராசையால் பிறக்கும் துரோகம் என்ற அரக்கன் எவரையும் விட்டதில்லை. மாபெரும் பேரரசுகள், வீரர்கள், மகான்கள், பெருந்தலைவர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் இந்த துரோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை இதிகாசக் கதைகள், புராணக் கதைகள், மகான்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், நிகழ்காலச் சம்பவங்கள், தன் நண்பர்கள் மற்றும் சகப்பணியாளர்கள் வாழ்க்கையில் நடந்தவை, தன் வாழ்க்கையில் நடந்தவை என பல்வேறு துரோகச் சம்பவங்களை கட்டுரை வடிவில் நமக்கு கொடுத்துயிருக்கிறார். துரோகங்களை வகைப்படுத்தி அதற்கேற்றாற் போல் கதைகளையும் சம்பவங்களையும் கொடுத்திருப்பது ஆசிரியரின் தனித்துவம். 

மனித வரலாறே துரோகங்களின் ரத்தத்தால் எழுதப் பட்டவை தான், துரோகத்தால் பாதிக்கப் பட்டவர்களும் அதற்க்கு ஒரு காரணம், மற்றவர்கள் மீது அவர்கள் வைக்கும் அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வினையாகிறது என்கிறார் ஆசிரியர். 

துரோகம் செய்தவனை காலம் வாழ விட்டதில்லை விடவும் போவதில்லை என்பது ஆறுதல். இந்த அவசர இயந்திர உலகத்தில் ஒருவரை மிதித்து மற்றொருவர் முந்தும் காலத்தில் துரோகத்தில் இருந்து நம்மை முன்னெச்சரிக்கையாக வைத்துக்கொள்ள உதவும் புத்தகம் துரோகச் சுவடுகள்.

                                               

புருஷோத்தமன் ராமச்சந்திரன்