Friday, 19 October 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devadhaigal

ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devadhaigal





பிரபல எழுத்தளார் சுஜாதா அவர்கள் தன்னுடைய ஸ்ரீரங்க வாழ்கை நினைவுகளை(memoir) இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சந்தித்த மனிதர்களையும் அவர்களுடன் கற்றுக்கொண்டதையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதில் விவரித்து இருக்கிறார்.
ஒவ்வொரு நினைவுகளை படிக்கும் போதும் நமக்கு ஒரு சிறுகதை படிக்கும் எண்ணம் தோன்றுகிறது. இதற்கு காரணம் எழுத்தாளரின் எடுத்துரைத்தல்(narration) விதமும் அவர் குறிப்பிட்டுயுள்ளதைப் போல கற்பனையைச் சரியான விகிதாசாரத்தில் கதையுடன் சேர்த்ததுமே ஆகும். 
புத்தகத்தை வாசித்தப் பின்பு நம் பேச்சு, பிராமணச் சமூகத்தினரின் பேச்சு வழக்குப்போல் மாறினாலும் வியப்பில்லை. நிறைய தங்கிலிஷ்(Tanglish) வார்த்தைகள் உண்டு. சுஜாதா ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதற்கு இந்த புத்தகம் மற்றொருச் சான்று.


புருஷோத்தமன் ராமச்சந்திரன்  
Purushothaman Ramachandran






No comments:

Post a Comment